< Back
மாநில செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் மீட்பு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் மீட்பு

தினத்தந்தி
|
29 July 2023 6:48 PM GMT

களக்காடு அருகே சிங்கிகுளம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

களக்காடு:

களக்காடு அருகே சிங்கிகுளம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

கோவில் நிலங்கள்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் பல்வேறு இடங்களிலும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆலோசனையின்படி, ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் களக்காடு அருகே சிங்கிகுளம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறையினருக்கு புகார்கள் வந்தன.

50 ஏக்கர் நிலம் மீட்பு

இதையடுத்து நெல்லை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி வழிகாட்டுதலின் பேரில், உதவி ஆணையர் கவிதா தலைமையில், கோவில்கள் தனிப்பிரிவு தாசில்தார் இந்திராகாந்தி முன்னிலையில், கோவில் செயல் அலுவலர் முருகன், சரக ஆய்வாளர் லதா மற்றும் கோவில் பணியாளர்கள், சிங்கிகுளத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களை பார்வையிட்டு, அதனை அளவையர்கள் மூலம் அளவீடு செய்து, கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.

அதன் பின்னர் 22 ஏக்கர் நிலம் பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது மீதமுள்ள 28 ஏக்கர் நிலமானது கோவிலின் நேரடி சுவாதீனத்திற்கு எடுக்கப்பட்டு மீண்டும் மறு பொது ஏலத்திற்கு விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட கோவில் நிலத்தில் இந்து சமய அறநிலையத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

வருவாய் அதிகரிக்க...

இதேபோன்று ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோவில் மற்றும் அதன் தொகுப்பு கோவில்கள் அனைத்திற்கும் துறை நில அளவையர்கள் மூலம் 150 ஏக்கர் அளவீடு செய்யப்பட்டு, அதில் சுமார் 65 ஏக்கர் வரை பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும்,

மேலும் தொடர்ந்து கோவில் நிலங்கள் ஏலம் விடப்பட்டு கோவில் நிலங்களின் மூலம் கோவிலுக்கு வரும் வருவாய் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்