< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 10 ஏக்கர் நிலம் மீட்பு
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 10 ஏக்கர் நிலம் மீட்பு

தினத்தந்தி
|
13 Jun 2023 11:51 PM IST

அரக்கோணம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 10 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

அரக்கோணத்தை அடுத்த இலுப்பை தண்டலம் கிராம பகுதியில் விவசாயிகள் சிலர் ஏரி புறம்போக்கு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அரக்கோணம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாய குறை தீர்வு கூட்டத்திலும், அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரத்திடமும் தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன் பேரில் தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் பொது பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் இலுப்பை தண்டலம் பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சுமார் 10 ஏக்கர் ஏரி புறம்போக்கு இடத்தினை மீட்டு அதில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இது போன்று ஆக்கிரமிப்பில் உள்ள அரசு இடங்கள் தொடர்ந்து மீட்கப்படும் என தாசில்தார் சண்முக சுந்தரம் கூறினார்.

மேலும் செய்திகள்