< Back
மாநில செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

தினத்தந்தி
|
18 Sept 2023 1:00 AM IST

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் பொந்திகல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயி. இவருக்கு சொந்தமான மாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அங்குள்ள 60 அடி ஆழ கிணற்றில் மாடு தவறி விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த மாட்டை மீட்டனர்.

மேலும் செய்திகள்