< Back
மாநில செய்திகள்
என்னை கவனிக்காத மகனிடம் இருந்து சொத்தை மீட்டு தாருங்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

'என்னை கவனிக்காத மகனிடம் இருந்து சொத்தை மீட்டு தாருங்கள்'

தினத்தந்தி
|
4 April 2023 12:15 AM IST

‘என்னை கவனிக்காத மகனிடம் இருந்து சொத்தை மீட்டு தாருங்கள்’ என்று கலெக்டரிடம் மூதாட்டி மனு கொடுத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைக்கண்ணு என்பவரின் மனைவி வள்ளி (வயது 69). இவர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மகன் ராஜ்குமார் என்ற ரஹ்மானுக்கு என்னுடைய வீடு மற்றும் நிலத்தினை அவரின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு எழுதிக்கொடுத்தேன். இந்த சொத்துக்களை பெற்றுக்கொண்ட பிறகு எனது மகனும், மருமகளும் என்னை சரியாக கவனிக்காமல் தவிக்கவிட்டுவிட்டனர். மேலும், வசிக்க இடம் கொடுக்காமல் வீட்டைவிட்டு விரட்டிவிட்டனர். தற்போது வாழ வழியின்றி தவித்து வருகின்றேன். எனவே, எனது சொத்துக்களை மீண்டும் எனக்கு மீட்டு தர வேண்டும். எனது பெயருக்கு சொத்தினை மாற்றித்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் இதுதொடர்பாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும். தற்போது எனது மகன் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதால் அவரிடம் பேசி எனது சொத்தினை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்