< Back
மாநில செய்திகள்
அதியமான் கோட்டத்தில்ரூ.1 கோடியில் புனரமைக்கும் பணிகலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு
தர்மபுரி
மாநில செய்திகள்

அதியமான் கோட்டத்தில்ரூ.1 கோடியில் புனரமைக்கும் பணிகலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு

தினத்தந்தி
|
23 Oct 2023 1:15 AM IST

அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணியை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி

அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணியை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வள்ளல் அதியமான் கோட்டம்

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் வள்ளல் அதியமான் கோட்டம் உள்ளது. இந்த கோட்டம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மானிய கோரிக்கையின் போது தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் அறிவித்தார். இதனை தொடர்ந்து, அதியமான் கோட்டத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கோட்டத்தில் அதியமான் மற்றும் அவவையார் சிலைகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணி, வட்டமான அமைப்பில் ஆத்திச்சூடி அமைக்கும் பணி, வர்ணம் பூசும் பணி, புல்தரை அமைக்கும் பணி, சிறுவர் பூங்கா அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அறிவுறுத்தல்

வள்ளல் அதியமான் கோட்டத்தில் நடைபெற்று வரும் இந்த பணிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்