< Back
மாநில செய்திகள்
விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும்: மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
கரூர்
மாநில செய்திகள்

விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும்: மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

தினத்தந்தி
|
2 July 2023 11:43 PM IST

விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மாவட்ட மாநாடு

கரூரில் நேற்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பாலன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் செல்வம் வரவேற்று பேசினார்.

மாநில செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாட்ராயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் 200 நாள் வேலை கொடுக்க வேண்டும். தின ஊதியம் ரூ.600 வழங்க வேண்டும்.

மாத ஓய்வூதியம்

100 நாள் வேலைதிட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். 60 வயதான விவசாய தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். சேதமடைந்த தொகுப்பு வீடுகளை மராமத்து செய்து கொள்ள போதுமான நிதி வழங்க வேண்டும். தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் அமைத்திட வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போதிய டாக்டர் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்