< Back
மாநில செய்திகள்
அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

"அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்"- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
14 Nov 2023 10:21 PM IST

அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என முதல் அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டினையும் நிர்வாகத் திறனையும் மேம்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கையினைக் குழந்தைகள் நாளான இன்று பெற்றுக்கொண்டேன்.

சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அதிகாரிகளோடு கலந்தாய்வு செய்து, இந்த அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.

மதிப்பூதியம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் குழந்தைகளின் நலனுக்கான இப்பணியை ஏற்றுக்கொண்டு அறிக்கை அளித்த நீதியரசர் சந்துரு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைப் பதிவு செய்கிறேன்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்