< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை
|6 May 2023 1:10 AM IST
நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிவகாசியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மனைவி முத்துமாரி கடந்த பிப்ரவரி 22-ந் தேதி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தாயும், குழந்தையும் உயிரிழந்தனர். இது தொடர்பாக பன்னீர்செல்வம் இதற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை கோரியும், அரசு நிவாரணம் வழங்க கோரியும், தனக்கு அரசு வேலை வழங்க கோரியும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்திருந்தார். மாவட்ட நிர்வாகம் பன்னீர் செல்வத்திற்கு விதிமுறைகளை தளர்வு செய்து சிறப்பினமாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.