< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை

தினத்தந்தி
|
25 Jun 2022 12:44 AM IST

மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையிலான வங்கி கடனுதவி வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி 18 முதல் 50 வயது வரை உள்ள 150 மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் 120 மனுக்கள் மீது வங்கிகளுக்கு பரிந்துரைத்து உடனடியாக கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இன்று (சனிக்கிழமை) ஆலத்தூர் தாலுகா, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் வேலை வாய்ப்பு அளிக்க உள்ளனர். எனவே அந்த முகாமிலும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் ேகட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்