< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாமக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபர் குத்தி கொலை
|19 July 2022 11:15 AM IST
நாமக்கல் அருகே ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் மர்மநபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
நாமக்கல்:
நாமக்கல்-திருச்சி சாலை ஜெய் நகரை சேர்ந்தவர் குமரேசன் (வயது 48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், நேற்று இரவு நண்பர்களுடன் மது அருந்திவிட்டு மது போதையில் காரில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவரது கார் திருச்சி சாலை ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது மர்மநபர்களால் கழுத்தில் குத்தப்பட்டு படுகாயம் அடைந்து காரில் இருந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.
அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போது அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டுள்ளது, நாமக்கல்லில பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.