< Back
மாநில செய்திகள்
தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம்? அண்ணாமலையுடன் நேருக்குநேர் விவாதிக்க தயார் - அமைச்சர் பொன்முடி
மாநில செய்திகள்

'தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம்? அண்ணாமலையுடன் நேருக்குநேர் விவாதிக்க தயார்' - அமைச்சர் பொன்முடி

தினத்தந்தி
|
27 May 2023 2:50 PM GMT

எந்த இடத்திலும் அண்ணாமலையுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்வழி கல்வியை மாணவர்கள் மத்தியில் பரவலாக்க, தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தமிழக அரசு எடுத்த முயற்சிகள் என்னென்ன? என்பதை சொல்ல தயாரா? என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.

புதிய கல்வி கொள்கையின் கீழ், மும்மொழி கற்றலில் இந்தி கட்டாயம் இல்லை, ஆனால் தாய்மொழி கற்பது கட்டாயம் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும் மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த தயாரா? என்று அண்ணாமலை சவால் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் அண்ணாமலையுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "சென்னையில் எந்த இடத்தில், எந்த பொதுக்கூட்டத்தில் பேச சொன்னாலும் நான் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன். மும்மொழிக் கொள்கை, தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம்? தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை எந்த அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதை எல்லாம் எடுத்துப் பேச நான் தயார்" என்று தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்