< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் - தமிழ்நாடு காவல்துறை
|10 Nov 2023 12:13 PM IST
காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 30 பேர் கொண்டதாக ஒவ்வொரு பேரிடர் மீட்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் 24x7 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் பருவமழை பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்ள, 18 பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 30 பேர் கொண்டதாக ஒவ்வொரு பேரிடர் மீட்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மழை பாதிப்பு அதிகம் உள்ள நீலகிரி, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர் என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.