திருவாரூர்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் மீண்டும் பதிவு
|மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் மீண்டும் பதிவு செய்தனர்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் மீண்டும் பதிவு செய்தனர்.
மகளிர் உரிமைத்தொகை
தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மாதம் தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. இந்த நிலையில் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதையடுத்து மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் 18-ந் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
விடுபட்ட பெண்கள்
அதன்படி திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் நக்கீரன் தலைமையில், துணை தாசில்தார் பாரதி, முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் ஜெயக்குமார், கமலா உள்பட அரசு அலுவலர்கள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான சேவை மையம் மூலமாக விடுபட்டவர்கள் மீண்டும் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் ஏராளமான பெண்கள் ஆதார், குடும்ப அட்டை, செல்போன் எண் ஆகியவற்றை மீண்டும் ஆர்வத்துடன் பதிவு செய்தனர். இந்த பணியானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. அதை தொடர்ந்து அரசின் மறு அறிவிப்பு வரும் வரை பதிவு செய்யப்படும். இதனை விடுபட்ட பெண்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.