ஈரோடு
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் மறுபூஜையைெயாட்டி பக்தர்கள் ரூ.38½ லட்சம் உண்டியல் காணிக்கை
|பண்ணாரி மாரியம்மன் கோவிலில் மறுபூஜையையொட்டி பக்தர்கள் ரூ.38½ லட்சத்தை உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
சத்தியமங்கலம்
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் மறுபூஜையையொட்டி பக்தர்கள் ரூ.38½ லட்சத்தை உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
பண்ணாரி மாரியம்மன்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 4-ந் தேதி அதிகாலையில் நடந்தது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நேற்று கோவிலில் மறுபூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அப்போது சிறப்பு அலங்காரத்தில் பண்ணாரி மாரியம்மன் அருள்பாலித்தார்.
ரூ.38½ லட்சம்
மறுபூஜையையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள 20 உண்டியல்களை திறந்து அதில் உள்ள காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
இந்த பணி பண்ணாரி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சுவாமிநாதன், ஆய்வாளர் சிவமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வங்கி அலுவலர்கள், பல்வேறு சேவை சங்கத்தினர், பக்தர்கள், கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பக்தர்கள் ரூ.38 லட்சத்து 48 ஆயிரத்து 148- ஐ உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 147 கிராம் தங்கம், 386 கிராம் வெள்ளி ஆகியவையும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.