< Back
மாநில செய்திகள்
ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு குறித்து ஆர்.டி.ஓ. ஆய்வு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு குறித்து ஆர்.டி.ஓ. ஆய்வு

தினத்தந்தி
|
8 Feb 2023 12:30 AM IST

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆர்.டி.ஓ. ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோணியார் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாடிவாசல் மற்றும் கேலரி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ. பிரேம்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். ஜல்லிக்கட்டு மைதானம், காளைகள் தங்க வைக்கும் இடம், மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், கால்நடைகள் பரிசோதனை செய்யும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

அப்போது, ஜல்லிக்கட்டு மைதானம் அருகே உள்ள கிணறுகளை பேரிக்கார்டு வைத்து மூட வேண்டும் என விழா கமிட்டியினருக்கு ஆர்.டி.ஓ. அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு தாசில்தார் சந்தன மேரி கீதா, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, மண்டல துணை தாசில்தார் தங்கமணி, வருவாய் ஆய்வாளர் ரமிஜா பானு, கிராம நிர்வாக அலுவலர் திருமால் மற்றும் விழா கமிட்டியினர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்