< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
ரிசர்வ் வங்கி ஊழியர்கள் பேரணி
|20 Feb 2023 2:09 PM IST
இந்திய ரிசர்வ் வங்கி நிதி கல்வியறிவு விழிப்புணர்வு வாரத்தையொட்டி ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் நடை பயணத்தை நடத்தியது.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்த இந்த சைக்கிள் பேரணி மற்றும் நடை பயணத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். 'நல்ல நிதி நடத்தை உங்களை மீட்கும்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த பேரணி நடந்தது.
சென்னை இந்திய ரிசர்வ் வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் உமா சங்கர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுமார் 150 ரிசர்வ் வங்கி பணியாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் நிதி விழிப்புணர்வு தொடர்பான தகவல்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வினியோகித்தும் பேரணியில் பங்கேற்றனர்.