ராயபுரம்: சொத்து கேட்டு அடித்து துன்புறுத்திய கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண் கைது
|சொத்து கேட்டு அடித்து துன்புறுத்திய கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்னை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
ராயபுரம் சோமு செட்டி தெருவில் வசித்து வருபவர் சரவணன் (வயது 40). இவருடைய மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். சரவணன் ராயபுரத்தில் சாலையோரம் துணி வியாபாரம் செய்து வந்தார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவாராம்.
இந்நிலையில் இன்று காலை குடி போதையில் இருந்த சரவணன் மனைவி முத்துலட்சுமியிடம் தஞ்சாவூரில் உள்ள உனது சொத்தை பிரித்து பணத்தை பெற்றுக் கொண்டு வா என்று கூறி அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே போய் விடு என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துலட்சுமி போதையில் இருந்த சரவணணை பனியன் துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து முத்துலட்சுமி சரவணனின், தம்பி சாமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கணவர் இறந்து போனதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சாமி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் ராயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து முத்துலட்சுமியிடம் போலீசார் விசாரித்த போது வர் கூறியதாவது, என் கணவர் தஞ்சாவூரில் உள்ள என் சொத்தை விற்று பணத்தை கொண்டு வா என்று வற்புறுத்தி தினமும் தன்னை குடித்துவிட்டு வந்து கொடுமைப்படுத்தி வந்தார்.
இன்று எனது ஆடைகளை கழட்டி நிர்வாணமாக்கி வீட்டை விட்டு வெளியே போ என்று கூறியதால் ஆத்திரமடைந்த நான் பணியினால் அவர் கழுத்தை நெரித்தேன் இதில் அவர் இறந்து போனார் என்று போலீசிடம் கூறினார். இது தொடர்பாக முத்துலெட்சுமியை போலீசார் கைது செய்தனர்.