செங்கல்பட்டு
செய்யூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த மூலப்பொருட்கள் பறிமுதல்
|செய்யூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விஷ சாராயம் குடித்து
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர், அச்சரப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் செய்யூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓதியூர், நயினார்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிரடி சோதனை
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டாக வி.வி. சாய் பிரணீத் நியமிக்கப்பட்டார். அவருடைய தலைமையில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 3 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 75 போலீசார் நேற்று ஓதியூர் நயினார் குப்பம் முதலியார் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 எரி சாராய கேன்கள் தோண்டி எடுக்கப்பட்டது, இதையடுத்து நைனார்குப்பம் பகுதிகளில் 3 எரி சாராய கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு வைக்கப்பட்டிருந்த மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.