< Back
மாநில செய்திகள்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இன்று செயல்படும்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இன்று செயல்படும்

தினத்தந்தி
|
8 Dec 2023 5:54 AM IST

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதலாவது, 2-வது வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதலாவது, 2-வது வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி ரேஷன் கடைகளுக்கான விடுமுறை தினமான இன்று மேற்கண்ட 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ஹர்சகாய் மீனா அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்