< Back
மாநில செய்திகள்
ஊழியர்கள் சென்றதால் ரேஷன் கடைகள் மூடல்
நீலகிரி
மாநில செய்திகள்

ஊழியர்கள் சென்றதால் ரேஷன் கடைகள் மூடல்

தினத்தந்தி
|
4 Sep 2023 10:00 PM GMT

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான ஆய்வு பணிக்கு ஊழியர்கள் சென்று விட்டதால், ரேஷன் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

கூடலூர்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான ஆய்வு பணிக்கு ஊழியர்கள் சென்று விட்டதால், ரேஷன் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

ரேஷன் கடைகள் மூடல்

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டது. பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்டன. தொடர்ந்து விண்ணப்ப விவரங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை ரேஷன் கடைகள் மூடப்பட்டு உள்ளது. மேலும் கடைகள் முன்பு, ஊழியர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வீடு, வீடாக ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணிக்கு சென்று உள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் பின்னர் வழங்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

ஆய்வுக்கு பின்னர் திறக்கப்படும்

இதை அறியாமல் கிராமப்புற மக்கள், ஆதிவாசி மக்கள் தங்களது அன்றாட பணிக்கு செல்லாமல் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு வருகின்றனர். அங்கு கடைகள் மூடப்பட்டு உள்ளதால் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மேலும் பொருட்கள் வாங்க முடியாமல், அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, ெரும்பாலானவர்கள் ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியை பயன்படுத்தி வருகிற நிலையில் கடை மூடப்பட்டு உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு வேறு ஊழியர்களை நியமித்து இருக்கலாம் என்றனர்.

இதுகுறித்து வட்ட வழங்கல் துறையினர் கூறும்போது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தகுதி உள்ள பெண்களுக்கு வழங்குவதற்காக ஆவணங்களின் அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் ரேஷன் கடைகள் மூடப்பட்டு உள்ளது. மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்ட ஆய்வுப்பணி முழுமை பெற்ற உடன் திறக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்