< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
|6 April 2023 12:00 AM IST
ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா தாக்கப்பட்டதை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் பிச்சை பிள்ளை கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டு்ம் என கோஷமிட்டனர்.