< Back
மாநில செய்திகள்
ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
29 March 2023 1:44 AM IST

ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பிச்சைபிள்ளை முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பொன்னர், இணை செயலாளர் பாபு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் பொது வினியோகத் திட்டத்திற்கு தனித்துறை அமைக்கவேண்டும், 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் சென்று பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு அருகாமையில் பணிபுரிய ஆவண செய்யவேண்டும், பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துவதுடன், அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்