< Back
மாநில செய்திகள்
ரேசன் கடை ஊழியர்கள் கனிவுடன் நடக்க வேண்டும் - அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்
மாநில செய்திகள்

ரேசன் கடை ஊழியர்கள் கனிவுடன் நடக்க வேண்டும் - அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
2 Feb 2024 9:14 PM IST

பொதுமக்களை எந்த விதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என ரேசன் கடை ஊழியர்களிடம் அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

ரேசன் கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் ரேசன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பொதுமக்களை எந்த விதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், பயோமெட்ரிக் கைரேகைப் பதிவில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பின், அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி ரேசன் கடை ஊழியர்கள் பொருட்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்