< Back
மாநில செய்திகள்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி
மாநில செய்திகள்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
22 Oct 2023 3:00 AM IST

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில், தரமான பொருட்களாக வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பொன்.அமைதி தலைமை தாங்கினார். இதில், சங்க நிர்வாகிகள், ரேஷன் கடை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்