< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
|20 Sept 2022 7:23 PM IST
ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கனகம்மாசத்திரம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் தமிழக எல்லைப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக கனகம்மாசத்திரம் அடுத்த கொல்லப்பள்ளி என்ற இடத்தில் ஆந்திராவை நோக்கி வந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனையிட்டதில் அதில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
விசாரணையில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மா பேட்டை பூஞ்சோலை நகர் பகுதியை சேர்ந்த பிரசன்னா குமார் (வயது 33) என்பவரை கைது செய்த போலீசார், அரிசி கடத்திய சரக்கு வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.