< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
|3 July 2023 12:16 AM IST
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அம்பை அருகே கோவில்குளம் பகுதியில் ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 560 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த பாப்பாக்குடி இலுப்பை குறிச்சி பகுதியை சேர்ந்த கருப்பசாமி (33) என்பவரை கைது செய்து, அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.