< Back
மாநில செய்திகள்
ரெயிலில் கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ரெயிலில் கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

தினத்தந்தி
|
17 Dec 2022 11:20 PM IST

ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு வரை செல்லும் பயணிகள் ரெயிலில் ரேஷன் அரிசி கர்நாடக மாநிலத்திற்கு கடத்துவதாக திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிக்கு தகவல் கிடைத்தது,

அதன்பேரில் அவர் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் மறைத்து வைத்து இருந்த சிறு சிறு மூட்டைகளில் சுமார் ½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வருவாய் துறையினர் திருப்பத்தூர் அருகே குன்னத்தூர் பகுதியில் உள்ள நுகர்வோர் பொருட்கள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்