< Back
மாநில செய்திகள்
சிற்றம்பாக்கம் ஊராட்சியில் ரேஷன் அட்டைதாரர்கள் குறை தீர்க்கும் முகாம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சிற்றம்பாக்கம் ஊராட்சியில் ரேஷன் அட்டைதாரர்கள் குறை தீர்க்கும் முகாம்

தினத்தந்தி
|
14 Jun 2022 12:53 PM IST

சிற்றம்பாக்கம் ஊராட்சியில் ரேஷன் அட்டைதாரர்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் ஊராட்சியில் ரேஷன் அட்டைதாரர்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிற்றம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரமணி சீனிவாசன் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், ரேஷன் கடை அலுவலர் பாக்கியராஜ், ஊராட்சி செயலாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வட்ட வழங்கல் அலுவலர் அம்பிகா, அ.தி.மு.க.வின் ஒன்றிய அவைத்தலைவர் சிற்றம் ஜெ.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் சிற்றம்பாக்கம், சிற்றம்பாக்கம் காலனி, தென்காரணி போன்ற பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவை செய்து பயன் பெற்றனர்.

மேலும் செய்திகள்