< Back
மாநில செய்திகள்
ரேஷன்கார்டு குறைதீர் முகாம் - இன்று நடக்கிறது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

ரேஷன்கார்டு குறைதீர் முகாம் - இன்று நடக்கிறது

தினத்தந்தி
|
13 Aug 2022 2:38 PM IST

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக குடும்பஅட்டை தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறைதீர் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.

செங்கல்பட்டு ஆப்பூரிலும், செய்யூர் தேன்பாக்கத்திலும், மதுராந்தகம் கடமலைபுத்தூரிலும், திருக்கழுக்குன்றம் பொன்விளைந்தகளத்தூரிலும், திருப்போரூர் இல்லலூரிலும், வண்டலூர் புதுப்பாக்கத்திலும் நடைபெறுகிறது.

இந்த குறைதீர் முகாம்களில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரிமாற்றம், புதிய ரேஷன்கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவுசெய்தல், கைப்பேசிஎண் பதிவு மாற்றம் செய்தல், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவுசெய்தல் போன்ற சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்