< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
வெளிமாநில தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு
|27 Sept 2023 12:15 AM IST
வெளிமாநில தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்து இங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் eShram இணையதளத்தில் பதிவு செய்து இதுவரை ரேஷன் கார்டு பெறாத தொழிலாளர்களுக்கு புதிதாக ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. எனவே, வெளி மாநிலங்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் உரிய படிவங்களை பெற்று விண்ணப்பித்து ரேஷன் கார்டு பெறலாம். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.