< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் ஜூன் 11-ந்தேதி குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம்
|9 Jun 2022 9:17 PM IST
அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 11-ந்தேதி குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளை பெறுவதற்காகவும், ஏற்கனவே இருக்கும் குடும்ப அட்டையில் திருத்தம் செய்வதற்காகவும் பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் குடும்ப அட்டையில் மாற்றங்கள் மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜூன் 11-ந்தேதி குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.