காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழா
|காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
உலக புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் வரதராஜபெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு சிகப்பு பட்டு உடுத்தி, பச்சை நிற மனோரஞ்சித பூ மாலை, பஞ்சவர்ண மலர் மாலை திருவாபரணங்கள் அணிந்து தங்க சூரிய பிரபை வாகனத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்
பின்னர் மேளதாளங்கள் முழங்க, வேத பாராயணம் கோஷ்டியினர் பாடிவர மாடவீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கற்பூர தீபாராதனைகள் காண்பித்து வழிபட்டனர். மாலை சந்திரபிரபை வாகனத்தில் சாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.