< Back
மாநில செய்திகள்
பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி ரத யாத்திரை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி ரத யாத்திரை

தினத்தந்தி
|
11 Sept 2023 1:00 AM IST

திண்டுக்கல்லில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ரத யாத்திரை வந்தவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். இந்த நிலையில் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நாடு தழுவிய அளவில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது.

இந்த ரதயாத்திரை கடந்த 5-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இதையடுத்து பல்வேறு ஊர்களின் வழியாக நேற்று திண்டுக்கல்லுக்கு ரதயாத்திரை வந்தது. அப்போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து முதன்மை கல்வி அலுவலகம் அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிரசார நிகழ்ச்சி நடந்தது.

இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணை பொதுச்செயலாளர் ரெங்கராஜன் பொருளாளர் ஹரிகோவிந்தன் ஆகியோர் பேசினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் துரைராஜ், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்