< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை: சைவ ஓட்டல் பொரியலில் எலி தலை..!பொதுமக்கள் போராட்டம்
மாநில செய்திகள்

திருவண்ணாமலை: சைவ ஓட்டல் பொரியலில் எலி தலை..!பொதுமக்கள் போராட்டம்

தினத்தந்தி
|
11 Sept 2022 11:52 PM IST

ஆரணி அருகே உள்ள சைவ ஓட்டலின் பொரியலில் எலி தலை இருந்ததாக பொதுமக்கள் ஓட்டல் முன்பு போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சைவ ஓட்டலில், ஆரணி காந்திநகர் பகுதியை சார்ந்த முரளி என்பவரின் உறவினர் சில நாட்களுக்கு முன்பு இறந்துள்ளனர்.முரளியின் உறவினர் இறந்தவருக்கு படையலிட்டு வழிபட ஓட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளனர்.

இன்று பகல் ஓட்டல் தரப்பில் உணவுகளை டோர் டெலவரி செய்துள்ளனர். அந்த சாப்பாட்டை படையலிட்டு உறவினர்கள் சாப்பிட்ட பிறகு மீதமான உணவுகளை வேறு பாத்திரத்தில் மாற்றும் போது பீட்ரோட் பொரியலில் எலி தலை துண்டு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஓட்டல் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு பார்வையிட மறுத்த ஓட்டல் தரப்பினர், தாமதம் ஏற்ப்பட்டதால் ஆத்திரம் அடைந்த முரளி, அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் மற்றும் அவரது உறவினர்கள் எலிதலையோடு ஓட்டலுக்கு நேரில் வந்து ஓட்டலில் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஓட்டலின் வெளியே சாலையில் நின்று தர்ணாவில் ஈடுப்பட்டனர். அதனை தகவல் அறிந்த நகர போலீசார் தர்ணாவில் ஈடுப்பட்ட நபர்களை அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் ஹோட்டலுக்கு சென்று உணவு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தி எடுத்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்