< Back
மாநில செய்திகள்
ராசிபுரத்தில் வீட்டுமனை கோரி தாசில்தார் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
நாமக்கல்
மாநில செய்திகள்

ராசிபுரத்தில் வீட்டுமனை கோரி தாசில்தார் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

தினத்தந்தி
|
9 Feb 2023 12:30 AM IST

ராசிபுரம்:

ராசிபுரத்தை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

எனவே தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரி ராசிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தலையில் காந்தி குல்லா அணிந்து வந்திருந்தனர். இதையடுத்து பெண்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்