< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
ராசிபுரத்தில்சாலை பாதுகாப்பு வார விழாடிராக்டர்களில் பிரதிபலிப்பு பட்டைகள் ஒட்டப்பட்டன
|13 Jan 2023 12:15 AM IST
ராசிபுரம்:
ராசிபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் வாகனத்தின் பின்புறம் ஏற்படும் மோதலை தடுக்க சரக்கு வாகனங்கள் மற்றும் டிராக்டர், ட்ரெய்லர் வண்டிகளை கண்காணித்தனர். அப்போது டிராக்டர் மற்றும் ட்ரெய்லர் வண்டிகளில் பின்புறம் பிரதிபலிக்கும் பட்டைகள் இல்லாததை கண்டறிந்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா வாகனத்தின் பின்புறம் பிரதிபலிக்கும் பட்டைகள் இல்லாத வாகனங்களுக்கு பிரதிபலிக்கும் பட்டைகளை ஒட்டினார். அப்போது அவர் வாகன டிரைவர்களிடம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். வருகிற 17-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.