நாமக்கல்
ராசிபுரம் அருகே கும்மி, ஒயிலாட்ட அரங்கேற்ற விழா
|ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள தாத்தையங்கார்பட்டி மாரியம்மன் கோவில் திடலில் ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா நடந்தது. விழாவையொட்டி கணபதி பூஜை, முளைப்பாரி எடுத்தல், குத்துவிளக்கு ஏற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கும்மி மற்றும் ஒயிலாட்ட நிகழ்ச்சியில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்ட குழுவினரும் மற்றும் சிறுவர்கள் பெரியோர்கள் என 200 பேர் கலந்துகொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியானது கொங்கு மண்டலத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகளுக்கு ஒயிலாட்டத்தின் சிறப்பும், கும்மியின் சிறப்பும் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. ஆசிரியர் ரவி மற்றும் மேகநாதன் ஆகியோர் குழுவினர்களுக்கு பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை கொங்கு இளைஞர் அணி மற்றும் ஊர் பொதுமக்கள், தர்மகர்த்தாக்கள் செய்திருந்தனர்.