< Back
மாநில செய்திகள்
மாண்டஸ் புயல் எதிரொலி:  ராசிபுரம் தீயணைப்பு துறை சார்பில் முன்னேற்பாடுகள் தயார்
நாமக்கல்
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி: ராசிபுரம் தீயணைப்பு துறை சார்பில் முன்னேற்பாடுகள் தயார்

தினத்தந்தி
|
10 Dec 2022 12:10 AM IST

ராசிபுரம்:

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், கொல்லிமலை, புதுச்சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை சேதம், அசம்பாவிதங்களை எதிர்கொள்ள ராசிபுரம் தீயணைப்பு துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ரப்பர் படகுகள், கயிறு, லைப் ஜாக்கெட்கள், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தால் உடனடியாக தண்ணீரரை அகற்ற மின்மோட்டார் உள்ளிட்ட பொருட்களை தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

மேலும் வெள்ளம் சமயத்தில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்