< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ராசிபுரம் நகராட்சியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
|31 Aug 2022 11:47 PM IST
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ராசிபுரம் நகராட்சியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
ராசிபுரம்:
ராசிபுரம் நகராட்சி சார்பில் மேலாளர் வசந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராசிபுரம் நகராட்சிக்கு தினசரி நெடுங்குளம் காட்டூர் காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு நகராட்சி பகுதியில் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மின்மோட்டார்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே ஆற்றில் நீர்மட்டம் குறையும் வரை மோட்டார் இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ராசிபுரம் நகர் பகுதியில் ஆற்றின் நீர்மட்டம் குறையும் வரை குடிநீர் வினியோகம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.