< Back
மாநில செய்திகள்
ராசிபுரம் நகராட்சியில்  குழந்தைகள் பாதுகாப்பு திட்ட கூட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

ராசிபுரம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட கூட்டம்

தினத்தந்தி
|
26 May 2022 9:03 PM IST

ராசிபுரம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட கூட்டம்

ராசிபுரம்:

ராசிபுரம் நகராட்சியின் கூட்ட அரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், மற்றும் பணியாளர் கவிதா, சாதனா, மேற்பார்வையாளர் விஜயலட்சுமி, மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கீதா, மாவட்ட குழந்தைகள் நல உறுப்பினர் ராஜேந்திரன், நகர்மன்ற உறுப்பினர் லலிதா, நகராட்சி தூய்மை அலுவலர் திருமூர்த்தி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குழந்தை திருமணம், குழந்தை பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை போன்றவற்றை தடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும் செய்திகள்