< Back
மாநில செய்திகள்
நெல்லிக்குப்பம் அருகே    சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம்    தொழிலாளிக்கு வலைவீச்சு
கடலூர்
மாநில செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
29 Oct 2022 1:11 AM IST

நெல்லிக்குப்பம் அருகே சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை தேடி வருகின்றனா்.


பண்ருட்டி, அக்.29-

நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, சம்பவத்தன்று தனது வீட்டில் குளித்து கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த பல்லவராயநத்தம் காலனியை சேர்ந்த தொழிலாளியான நாகராஜ்(வயது 24), சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை சிறுமியிடம் காண்பித்து மிரட்டி அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் நாகராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்