தூத்துக்குடி
இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்:மதபோதகர் அதிரடி கைது
|கயத்தாறு அருகே இளம்பெண்ணை மிரட்டி ஐந்து ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக மதபோதகர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக மதபோதகர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பலாத்காரம்
வேலூர் மாவட்டம் பெரிய அல்லாபுரம் எழில்நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் வினோத் ஜோஸ்வா (வயது 40). இவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கீழக்கோட்டையில் ஆசீர்வாத சகோதர திருச்சபை என்ற பெயரில் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போதகராக உள்ளார்.
இவர் 20 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததுடன் அடிக்கடி பலாத்காரமும் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியே கூறினால் கொைல செய்து விடுவேன் என அந்த பெண்ணை மிரட்டி உள்ளார்.
மத போதகர் கைது
வினோத் ஜோஸ்வாவின் கொடுமையை தாங்க முடியாமல் நடந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் தனது தந்தையிடம் கூறி உள்ளார். மேலும், இதுகுறித்து கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இதுதொடர்பாக வினோத் ஜோஸ்வாவை போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த மதபோதகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.