< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு
|16 Dec 2022 12:15 AM IST
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம் அருகே பேரங்கியூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 26). இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயதான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
10 ஆண்டு சிறை
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இறுதி விசாரணைகள் முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.