< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
|3 July 2024 5:17 AM IST
15 வயது பள்ளி சிறுமியை ஆசை வார்த்தை கூறி இரு வாலிபர்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அம்மாபட்டியை சேர்ந்தவர்கள் ஹரிகரன் (வயது19) யுவராஜ் (22). இவர்கள் இருவரும் 15 வயது பள்ளி சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பெற்றோர்கள் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போது தன்னை இருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். அதன் பேரில் அவரது பெற்றோர்கள் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹரிகரன், யுவராஜ் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.