< Back
மாநில செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்தவர் கைது
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்தவர் கைது

தினத்தந்தி
|
4 March 2023 1:08 AM IST

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்தவர் கைது செய்யப்பட்டார்.

குன்னம்:

கற்பழிப்பு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 49). இவர் நேற்று முன்தினம் மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் அவர், ஒரு வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 26 வயது பெண்ணுக்கு தின்பண்டம் வாங்கி கொடுத்து கற்பழித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த, அவரது தாய் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, பால்ராஜ் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.

கைது

இது குறித்து அந்த பெண்ணின் தாய் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர். பின்னர் அவரை பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்