< Back
மாநில செய்திகள்
சிறுமி பாலியல் பலாத்காரம்:புரோட்டா மாஸ்டர் போக்சோவில் கைது
தேனி
மாநில செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்:புரோட்டா மாஸ்டர் போக்சோவில் கைது

தினத்தந்தி
|
11 July 2023 12:15 AM IST

சின்னமனூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புரோட்டா மாஸ்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரை சேர்ந்தவர் அசாருதீன் என்ற அஸ்கர் (வயது 32). இவர், வடபுதுப்பட்டியில் ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியிடம் பழகினார். அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அசாருதீன் என்ற அஸ்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்