< Back
மாநில செய்திகள்
நாமக்கல் அருகேபள்ளி மாணவி பலாத்காரம்17 வயது சிறுவன் மீது போக்சோவில் வழக்கு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் அருகேபள்ளி மாணவி பலாத்காரம்17 வயது சிறுவன் மீது போக்சோவில் வழக்கு

தினத்தந்தி
|
1 Jun 2023 12:30 AM IST

நாமக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான். இந்த சிறுவனுக்கும், 16 வயது நிரம்பிய பள்ளி மாணவி ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே காதல் ஜோடியினர் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த சிறுவன், மாணவியை பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார். எனவே மாணவியின் அத்தை சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்