< Back
மாநில செய்திகள்
தர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்மெக்கானிக் மீது போக்சோவில் வழக்கு
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்மெக்கானிக் மீது போக்சோவில் வழக்கு

தினத்தந்தி
|
14 May 2023 12:30 AM IST

தர்மபுரி அருகே 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக மெக்கானிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுமி பலாத்காரம்

தர்மபுரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமியின் வழக்கமான நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.

அப்போது அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மெக்கானிக்கான விக்ரம் (21) என்பவர் மாணவியிடம் பழகி இருப்பது தெரியவந்தது. பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த விக்ரம் கட்டாயப்படுத்தி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்தார்.

போக்சோவில் வழக்கு

இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து போக்சோ பிரிவின் கீழ் விக்ரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்