< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
ராணியார் மருத்துவமனை பெண் ஊழியர் பணியிடை நீக்கம்
|27 Dec 2022 1:11 AM IST
ராணியார் மருத்துவமனை பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு கர்ப்பிணிகள், நோயாளிகள் என ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளிடம் பணம் கேட்டு வாங்குவதாக அங்கு பணியாற்றும் ஊழியர் மாரிக்கண்ணு மீது புகார் வந்தது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் பூவதி விசாரணை நடத்தினார். இதையடுத்து மருத்துவமனை ஊழியரான மாரிக்கண்ணுவை பணியிடை நீக்கம் செய்து டீன் உத்தரவிட்டார். மேலும் ஏற்கனவே இவர் மீது புகார் வந்ததன் அடிப்படையில் ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் டீன் கூறினார்.