ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக எஸ்.எம்.சுகுமார் நியமனம்
|ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளராக எஸ்.எம்.சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளராக எஸ்.எம்.சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மாவட்ட செயலாளர்
அ.தி.மு.க.வில் பல்வேறு நிர்வாகிகளை மாற்றம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளராக எஸ்.எம்.சுகுமாரை நியமித்து தலைமை அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் அவரை நேரில் சந்தித்து மாலை அணிவித்து, வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நன்றி
அப்போது தொண்டர்களிடையே பேசிய எஸ்.எம்.சுகுமார் கூறுகையில், ''ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்சி பணியை மேற்கொள்ள வாய்ப்பளித்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிேறன்.
மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் பிற அணி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும்'' என்றார்.